Thursday, March 12, 2009

மீலாத் விழா நிகழ்ச்சியின் போது நடத்திய தற்கொலைத் தாக்குதல் - அக்குறஸ்

விசுவமடு ஆட்லறிப் படைத் தள அழிப்பில் வீரச்சாவைத் தழுவிய கரும்புலிகளுடன் விடுதலைப் புலிகளின் தலைவர்














விசுவமடு, தேராவில் பிரதேசத்தில் அமைந்திருந்த சிறிலங்கா இராணுவத்தின் பாரிய ஆட்லறிப் படைத் தளம் விடுதலைப் புலிகளால் செவ்வாய்கிழமை அதிகாலை தகர்த்து அழிக்கப்பட்டுள்ளது.
கரும்புலிகள் படையணியும், கிட்டுப் பீரங்கிப் படையணியும் இணைந்து நடத்திய இந்த வெற்றிகரத் தாக்குதலில் ஆறு ஆட்லறிகளும் மற்றும் வெடி பொருட்களும் தகர்த்து அழிக்கப்பட்டுள்ளன. இதில் 50ற்கும் மேற்பட்ட சிறிலங்காப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.

மூன்று கரும்புலிகள் உட்பட ஏழு போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். இந்த வெற்றிகரத் தாக்குதலில்

கரும்புலி லெப்.கேணல் மாறன்
கரும்புலி மேஜர் தமிழ்மாறன்
கரும்புலி கப்டன் கதிர்நிலவன்

மேஜர் மலர்ச்செம்மல்
கப்டன் ஈழவிழியன்
கப்டன் காலைக்கதிரவன்
கப்டன் கலையினியவன்

ஆகிய போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் அவர்களுடன் கரும்புலிகள் எடுத்துக்கொண்ட நிழற்படங்களை ஈழநாதம் இதழ் நேற்று வெளியிட்டுள்ள

வன்னியில் சிறிலங்கா படையினர் வான் மற்றும் எறிகணைத் தாக்குதல்: நேற்றும் நேற்று முன்தினமும் 57 தமிழர்கள் படுகொலை; பலர் காயம்

வன்னிப்பெரு நிலப்பரப்பில் நேற்றும் நேற்று முன்தினமும் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணை மற்றும் வான் தாக்குதல்களில் 57 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் பெருமளவிலானோர் காயமடைந்துள்ளனர்.
இதில் நேற்று வியாழக்கிழமை சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் 32 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 43 பேர் காயமடைந்துள்ளனர்.

உணவுப்பொருட்களை ஏற்றிய கப்பலில் வந்த அனைத்துலக செஞ்சிலுவைச் சங்க அதிகாரிகள் படகின் மூலம் நேற்று வியாழக்கிழமை காலை 8:30 நிமிடமளவில் கரையோரத்திற்கு வந்தபோது சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதல்களை நடத்தினர்.

இதில் சம்பவ இடத்தில் இடம்பெயர்ந்து வாழ்ந்து வந்த 5 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 25 பேர் காயமடைந்துள்ளனர். இவர்களில் இருவர் மருத்துமனையில் உயிரிழந்துள்ளனர்.

க.நாதன் (வயது 44)
தி.மேரி தியாகினி (வயது 14)
க.கனகநாதன் (வயது 47)
யோ.கோபிநாத் (வயது 27)
ஈ.சிலம்பரசன் (வயது 20)
க.கௌதம் (வயது 06)
க.கேதீஸ்வரி (வயது 46) ஆகியோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்தை அனைத்துலக செஞ்சிலுவைச் சங்க பிரதிநிதி சென்று பார்வையிட்டுள்ளார். இதேவேளையில் அனைத்துலக சங்க பிரதிநிதிகள் கரைக்கு வந்த போது மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். மக்களை கொல்கின்ற சிறிலங்கா படை எறிகணைத் தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என அனைத்துலக செஞ்சிலுவைச் சங்க பிரதிநிதிகளிடம் மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

மாத்தளன், அம்பலவன்பொக்கணை, வலைஞர்மடம் மற்றும் பச்சை புல்மோட்டை ஆகிய பகுதிகளில் நேற்று சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

சோ.சிந்துஜன் (வயது 14)
சோ.சுகன்யா (வயது 20)
அ.அனெக்ஸ்கிங்ஸ்ரன் (வயது 36)
பே.இந்திரன் (வயது 26)
சி.மனோறஞ்சிதம் (வயது 28)
சி.நாகேஸ்வரி (வயது 49)
சி.கமலகாந்தன் (வயது 35)
இ.பிரியதர்சினி (வயது 16)
க.கணநாதன் (வயது 45)
நோ.இந்திராணி (வயது 58)
ப.நவரத்தினராசா (வயது 50)
அ.இராஜேஸ்வரி (வயது 18)
இ.சுதர்சினி (வயது 15)
ரவிநாத் (10 மாதம்)
ப.பரமேஸ்வரி (வயது 30)
சு.ருக்குமணி (வயது 66)
த.சரண்யா (வயது 08)
செ.லக்சனா (வயது 04)
வி.பிரதீபன் (வயது 04) ஆகியோர் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட போது உயிரிழந்துள்ளனர்.

அம்பலவன்பொக்கணை மற்றும் பச்சைபுல்மோட்டை பகுதியில் சிறிலங்கா வான்படையின் வானூர்திகள் நேற்று குண்டுத் தாக்குதலை நடத்தியுள்ளன.
இதில் 2 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 5 பேர் காயமடைந்துள்ளனர்.

சி.இரத்தினம் (வயது 70)
ந.கபில்ராஜ் (வயது 15) ஆகியோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளையில் மாத்தளன் மருத்துவமனையில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட வேண்டிய 5 பொதுமக்கள் நேற்று உயிரிழந்துள்ளனர்.

ஞ.யோகேஸ்வரன் (வயது 22)
ஐ.கணபதி (வயது 68)
சோ.சிந்துஜா (வயது 17) ஆகியோர் உயிரிழந்துள்ளனர். ஏனைய இருவரின் பெயர் விபரம் கிடைக்கப்பெறவில்லை.

அதேவேளை, மாத்தளன் பகுதியில் நேற்று முன்நாள் சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதலை நடத்தியுள்ளனர். இதில் 25 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் பெருமளவிலானோர் காயமடைந்துள்ளனர்.